Headlines

பழனியில் விசிக மாநில செயலாளர் தலைமையில் பெரியார் சிலை ஆய்வு..

பழனியில் விசிக மாநில செயலாளர் தலைமையில் பெரியார் சிலை ஆய்வு..

திண்டுக்கல் மாவட்டம் பழனி இரயிலடிச்சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலை கைப்பிடிகள் சேதம் அடைந்த நிலையில் திராவிடர் கழகம் சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் ஜே.பி.சரவணனிடம் உதவி கோரிய நிலையில்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உடன் சென்று சிலையை ஆய்வு செய்தார்.

உடனடியாக சிலைக்கு மாலை அணிவிக்கும் செல்லும் படியின் கைப்பிடிகள் மற்றும் சிலையை சுற்றியுள்ள பகுதிகளில் டைல்ஸ் கற்கள் அமைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக கூறியுள்ளார்.

மேலும் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி புத்துலக தொலை நோக்காளர் தந்தை பெரியார் பிறந்த நாளை கொண்டாடாக தயாராகி வரும் நிலையில் அனைத்து வேலைகளையும் விரைவில் முடித்து பெரியாரின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட உள்ளதாக

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் ஜே.பி.சரவணன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் பொன். அருண்குமார் மாவட்ட தலைவர் வெற்றிவேந்தன் பொதுக்குழு உறுப்பினர் இராதாகிருஷ்ணன் நகர செயலாளர் செந்தில்குமார் நகர இளைஞரணி செயலாளர் அறிவழகன் திமுக சித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆய்வு செய்யும் பணி நடைபெற்றன..

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *