செப் 8, கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வழக்கறிஞரின் வீட்டில் இருந்து நகைகள் திருடிய வழக்கில், சட்ட கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் அருகே வசிக்கும் வழக்கறிஞரிடம் தோழியாக பழகி வந்த அர்ஷிதா டிப்னி (23) என்பவர், அவர் இல்லத்திற்கு சென்ற போது 12 பவுன் நகைகளை திருடியதாக போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அர்ஷிதா டிப்னியை கைது செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
