மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள 200 வருடங்கள் கடந்த பழம் பெருமை வாய்ந்த U.C பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.

இந்த பொங்கல் விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்கள்.

இந்த பொங்கல் விழாவில் மாணவர்களுக்கு இடையே பல விளையாட்டு போட்டிகளில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.
இந்த பொங்கல் விழாவில் தமிழின் பெருமையை உணர்த்தும் விதமாக தமிழ் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் தங்கள் பெயர்களை தமிழில், 4000 வருடங்கள் பழமையான வாய்ந்த பிராமி எழுத்துக்களில் தங்கள் பெயர்களை எழுதி மகிழ்ந்தார்கள்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
