திருப்பூர் மாவட்டம் உடுமலை ராஜேந்திரா சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யக்கோரி உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே இந்து எழுச்சி பேரவை சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடுமலை ராஜேந்திரா சாலையில் பள்ளிகள் கோயில்கள் வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு மிக அருகாமையில் 50 மீட்டர் தொலைவில் 2016;என்ற எண் கொண்டஅரசு மதுபான கடை அமைந்துள்ளது
பொதுமக்களுக்கும்.வாகன ஒட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சித் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழக முதல்வர் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்து எழுச்சி பேரவையின் நிறுவனத் தலைவர் பழ சந்தோஷ் குமார் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஜி டி சதீஷ் கண்ணா, மாநில அமைப்பு செயலாளர் எல் பி சரவணன் மற்றும் மாநிலச் செயலாளர் துர்க்கை ஆனந்தன், நகரத் தலைவர் பி அரவிந்த் மற்றும் நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உடுமலை : நிருபர் மணி