திருநெல்வேலி,ஜன.13:-
திருநெல்வேலி, அபிஷேகப்பட்டியில் உள்ள, “மனோன்மணியம்” சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தமிழர் பாரம்பரியத்தை போற்றும் வகையிலான “பொங்கல் திருவிழா” இன்று (ஜனவரி.13) பல்கலைக்கழக வளாகத்தில், கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ‘முனைவர்’ என். சந்திரசேகர் தலைமை வகித்தார். பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முனைவர் கலா மற்றும் நிதி அலுவலர் சி. செல்வ குமார் ஆகியோர், முன்னிலை வகித்தனர்.

சிண்டிகேட் உறுப்பினர்கள், பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், ஆய்வாளர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, பல்கலைக்கழகத்தில் பணியாற்றும், நான்காம் நிலை (Class–D) பணியாளர்களுக்கு, துணைவேந்தர் புதிய சீருடைகளை வழங்கினார்.அத்துடன், தமிழர்களின்
பாரம்பரிய உடையணிந்து, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும், துணை வேந்தர் பொங்கல் வாழ்த்துகளை கூறி, இனிப்பு பொங்கல் மற்றும் கரும்புகளை வழங்கினார்.
மாணவ- மணவிகள் பங்கேற்ற பாரம்பரிய விளையாட்டுகள், வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழா முடியும் ரையிலும், உற்சாகமான சூழல் நிலவியது.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.
