Headlines

எமரால்டு பஜாரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் திறப்பு விழா..

எமரால்டு பஜாரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் திறப்பு விழா..

நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பால் கொள்முதல் நிலையம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது.

இதற்கு நிரந்தரமாக சொந்த கட்டிடம் வேண்டுமென்று எமரால்டு சுற்றுவட்டாரப் பொதுமக்கள் பல்வேறு தரப்பட்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கு கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்ட உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு கணேசன் அவர்களின் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் பால் கொள்முதல் நிலையத்திற்கு தனியாக கட்டணம் கட்டப்பட்டது.

இந்த கட்டடம் வர பேர் உதவியாக இருந்த நீலகிரி மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் திரு உமாராஜன் அவர்கள் இன்று அவர்களது திருக்கரங்களால் இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்த கட்டிடம் வருவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர் சந்தோஷ்குமார் நன்றியை தெரிவித்துக் கொண்டார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *