கோவை ஆட்சியர்அலுவலகம் அருகில் உள்ள bsnl அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அச்சு ஊடக உரிமையாளர் சங்கத்தின் சார்பாக கோவை மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அதிகாரி, அவர்கள், அவர்களுக்கு, தேவையான சில பத்திரிகையாளர்களை ஆதரித்தும் மற்ற பத்திரிக்கையாளர் அனைவரையும், புறக்கணிப்பதை, கண்டித்தும், இதைக் கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை கண்டித்தும் அனைத்து தினசரி மாதம் வாரம் வரும் இதழ்களின் பத்திரிகையாளர்களுக்கு, ஒன்றியஅரசு வழங்க அறிவுறுத்தியுள்ள, பஸ் பாஸ் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள். பஸ் பாஸ், அரசாங்க அடையாள அட்டை, நல வாரியத்தில் சேர்த்தல்போன்ற சலுகைகளை கொடுக்குமாறும் கொடுக்காமல் இருக்கும் மக்கள் செய்தி தொடரபு அதிகாரியை கண்டுகொள்ளாமல் இருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை கண்டிக்கும் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மாநில தலைவர், திரு, குமார் அவர்கள் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் திரு வேலுமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். மற்றும் ஏனைய சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்ள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக ஆட்சியாளர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தினர்.
கோவை மாவட்ட செய்தியாளர்: சம்பத்குமார்
