திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட துங்காவி, காரத்தொழுவு ஊராட்சிகளின் எல்லை பகுதியை இணைக்கும் பகுதியான உடையார்பாளையம் பகுதியில் சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்து செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இப்பிரச்சினை குறித்து செய்திதாள்களில் செய்தி வெளிவந்தது. மடத்துக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கநாதன் தலைமையில் துங்காவி ஊராட்சி செயலர் இளங்கோவன் , காரத்தொழுவு ஊராட்சி செயலர் தினேஷ் ஆய்வு மேற்கொண்டனர்.
மடத்துக்குளத்தை அடுத்துள்ள உடையார்பாளையம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு.
