திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபமேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் செயல்படுத்த விடாத இந்து விரோத விடியா திமுக அரசு, அங்கு சென்ற நமது மாநில தலைவர் திரு நைனார் நாகேந்திரன் MLA அவர்களை கைது செய்து கீழ்தரஅரசியல் செய்தது.
தொடர்ந்து இந்து விரோத செயல்களில் ஈடுபட்டு வழிபாட்டு உரிமையை வேரோடு பிடுங்கி எறிகிறது. அதனைக் கண்டித்து நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் திரு. Dr. A. தருமன் ஜி அவர்களின், ஆலோசனைப்படி முன்னாள் மாவட்ட தலைவர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் திரு ராமன் ஜி அவர்களின் தலைமையில் உதகை ATC பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில, மாவட்ட, அணி, பிரிவு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.
