Headlines

குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளில், பதக்கங்களை குவித்த, திருநெல்வேலி நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் !

குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளில், பதக்கங்களை குவித்த, திருநெல்வேலி நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள்!

திருநெல்வேலி, செப். 23:-

திருநெல்வேலி புறநகர் மாவட்டம், சேரன்மகாதேவி குறு வட்ட அளவில், இனறு (செப்டம்பர். 23) நடைபெற்ற தடகளப் போட்டிகளில், 2 தங்கம், 7வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என, மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்று, வெற்றிகளைக் குவித்த, திருநெல்வேலி பேட்டை நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு , பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி, பள்ளித் தலைமையாசிரியை “முனைவர்” ரோகிணி, வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.பள்ளி உதவித் தலைமையாசிரியை மைமூன் நிசா, முன்னிலையில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில், வந்திருந்த அனைவரையும், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் “முனைவர்”வெ.பெரியதுரை, வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் பள்ளி ஆசிரியப்பெருமக்கள், மாணவ மணிகள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன்,
வெற்றி பெற்ற அனைவருக்கும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் நிர்வாகிகளுடன் இணைந்து, வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளையும், தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

One thought on “குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளில், பதக்கங்களை குவித்த, திருநெல்வேலி நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் !

  1. Congratulations All the Athletes.with H.M.&Dr.Periyadurai physical education teacher GHS s nadukallur pettai Thirunelveli. By Dr.A.Mariappan.physical education teacher GHS Ammpapettai Thanjavur with National master Athletes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *