Headlines

70 வயது தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்..மடத்துக்குளம் சித்தி விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்றது.

70 வயது தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்.. மடத்துக்குளம் சித்தி விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள KTL சித்தி விநாயகர் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 70 வயது பூர்த்தியான மூத்த தம்பதியனருக்கு சிறப்பு செய்தல் விழா நடைபெற்றது.

70 வயது பூர்த்தியான தம்பதியர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் வருடம்தோறும் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இந்த விழாவானது தொடர்ந்து நடத்தப்பட்டது வருகிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினத்தில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது‌. இதில், திருக்கோயில் செயல் அலுவலர் , அறங்காவலர்கள் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *