அரசியல்
மதுரை புகழ்பெற்ற கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா மற்றும் தமிழக வெற்றி கழகம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த சந்தனக்கூடு திருவிழாவில் அப்பகுதி உள்ள பொதுமக்கள் பெருந்தலாக கலந்து கொண்டார்கள் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தையல் மிஷின் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த சந்தனக்கூடு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு தலைமை U.பாஷில் பாட்ஷா தர்கா மேனேஜிங் டிரஷ்டி, விஜய்…
ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்: ஊதிய உயர்வு, விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகள்
கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளர்கள், ஊதிய உயர்வு, வார விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், வார விடுமுறை வழங்க வேண்டும் என்பதுடன், பாலியல் தொல்லை குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலாளரை மீண்டும் பணியில் அமர்த்தக் கூடாது என்பதும் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கியக் கோரிக்கைகளில் அடங்கும். ஏற்கனவே பாலியல் தொல்லை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர்…
பழனி அருகே பள்ளிவாசல் சேதத்தை பார்வையிட்டு விசிக சார்பில் ஒரு லட்சம் நிதி உதவி ஜமாத்தார்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பெரிய கலையமுத்தூரில் மஸ்ஜிது நூர் ஜும்மா பள்ளிவாசல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிவாசல் வழியே தனியார் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் பட்டாசுகள் வெடித்த போது பட்டாசின் தீப்பொறி பள்ளிவாசல் மேற்கூரை மீது விழுந்து தீப்பற்றி எரிந்தன. தொடர்ந்து பள்ளிவாசல் மேற்கூரை மற்றும் மின்விசிறி இருக்கைகள் கேமரா உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. இதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளைஞர்த்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் ஜே.பி.சரவணன் தனது விசிக…
பழனி மாவட்ட அரசு மருத்துவமனையில் தூய்மை பணி ஒப்பந்தம் செய்துள்ள ஸ்மித் நிறுவன உரிமையை ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் விசிக அதிரடி அறிவிப்பு…
திண்டுக்கல் மாவட்டம் பழனி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த 17 நபர்களை ஸ்மித் என்ற தனியார் நிறுவனம் வேலையில் அமர்த்தப்படாமல் காலம் தாழ்த்தி வருகின்றது. தொடர்ந்து பல்வேறு மருத்துவத் துறை அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் நீதிமன்றம் சென்று அனுமதியானை வாங்கிய பின்பும் கூட இதுவரை அவர்களை பணி நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் ஸ்மித் என்ற தனியார் நிறுவன உரிமையை ரத்து செய்ய வேண்டும்…
பழனியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதி மையத்தில் முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் 74 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுமேற்கு ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமையில் விஜயகாந்த் திருவுருவு படத்திற்கு மலர் தூவி சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டன. தொடர்ந்து இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக தேமுதிக மாவட்ட செயலாளர் சிவக்குமார் கலந்து கொண்டு வீடற்றோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டன.. மேலும் அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு…
பழனியில் சிவ சேனா ஆலோசனைக் கூட்டம்: விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி காவல்துறைக்கு வேண்டுகோள்!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிவசேனா சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள், விநாயகர் சிலை தயாரிப்பது மற்றும் வேல் யாத்திரை பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய சிவசேனா பொறுப்பாளர்கள் மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் கொண்டாடப்படுவதைப் போல, தமிழகத்திலும் கணபதி விழா எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி, மக்கள் சுதந்திரமாகக் கொண்டாடும் வகையில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமின்றி காவல்துறை விதிக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் ஏற்கத் தயாராக இருந்தாலும், அது…
பழனியில் தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் த.வெ.க அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் பழனி மலைக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும், பழனி சக்கிலியர் மக்களுக்குச் சொந்தமான மடத்தைத் தனிநபருக்குப் பத்திரப்பதிவு செய்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் ஐந்தாண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….
ஏஐ மூலம் பெண்களுக்கு அவதூறு: எடப்பாடி மீது சி.வி. சண்முகம் கடும் குற்றச்சாட்டு.
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகவில் பெண்கள் மீது நடைபெறும் அவதூறு பிரச்சாரங்களை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கும் பெண் நிர்வாகிகளை குறிவைத்து ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். இது கட்சிக்குள் ஆபத்தான கலாச்சாரமாக உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அவதூறு நடவடிக்கைகளை தடுக்க வேண்டிய கட்சித் தலைமையே இதை மறைமுகமாக ஊக்குவிக்கிறது எனவும் சண்முகம் குற்றம் சாட்டினார். பெண்களை அவமதிக்கும்…
திமுக விரித்த சிகப்பு கம்பளம்… தவெகவுக்கு தாவும் தர்மயுத்தம்?: எடப்பாடியைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கும் ‘கையெழுத்து’ போடப்போகிறாரா ஓபிஎஸ்?!
தமிழக அரசியலில் எப்போதுமே ஆச்சரியங்களுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமிருந்ததில்லை. ஆனால், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் பயணத்தை கவனிப்பவர்களுக்கு, ‘அடுத்து எந்தப் பக்கம் திரும்பப் போகிறார்?’ என்பதே பெரிய புதிராக உருவெடுத்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதலில் எடப்பாடி பழனிசாமியால் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு, கட்சியிலிருந்தும் முறைப்படி வெளியேற்றப்பட்டார் ஓபிஎஸ். வீழ்ந்துவிட்டதாகக் கருதப்பட்ட அந்தத் தருணத்தில், ஆளும் திமுக தரப்பு அவருக்குக் கைகொடுத்தது. “தாய் கழகத்துக்குத் திரும்பி விட்டேன்” என்று உருகி, அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்னிலையில் இணைந்த ஓபிஎஸுக்கு,…
பாஜகவின் நிழல் ஆட்சியா தவெக ஆட்சி? – அமைதியின் பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்குகள்!
தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தவெக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இன்று வரை பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. “புதிய மாற்றம் வரும், தொழில்துறை செழிக்கும்” என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவெக அரசு தனது செயல்பாடுகளில் வேகம் காட்டாமல் கோட்டை விட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கும் மிக முக்கியமானது புதிய தொழில் முதலீடுகள். ஆனால், தவெக ஆட்சி…
