உதகை,எல்லநள்ளி:
நீலகிரி மாவட்ட எல்லநள்ளி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில், உதகை மேற்கு மண்டல அறிமுகக் கூட்டம் மாவட்ட பட்டியல் அணித் தலைவர் திரு. எஸ். தங்கம் ஜி அவர்கள் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பட்டியல் அணியின் மாநிலத் துணைத் தலைவரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான திரு. பி. முருகேசன் ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சி, நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் ஏ. தர்மன் ஜி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் திரு. கம்பட்டி பாபு, மாவட்ட துணைத் தலைவர்கள் திரு. ஈஸ்வரன், திரு. பாப்பண்ணன், மாவட்டச் செயலாளர் திரு. எம்.என். ராஜ்குமார், மாவட்டப் பொருளாளர் திரு. வெங்கடேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், சிறுபான்மை அணி மாநிலத் துணைத் தலைவர் திரு. அசோக் பாப்லானி, மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாவட்டத் தலைவர் திரு. சிவராஜ், ஆன்மீகப் பிரிவு மாவட்டத் தலைவர் திரு. சங்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
உதகை நகர் மண்டல் தலைவர் திரு. ரித்து கார்த்திக், உதகை வடக்கு மண்டல் தலைவர் திரு. கணேசன், மேற்கு மண்டல் பொதுச் செயலாளர் திரு. ராமமூர்த்தி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
பட்டியல் அணி மாவட்ட நிர்வாகிகளாக பொதுச் செயலாளர் திரு. சக்திவேல், துணைத் தலைவர்கள் திருவாளர்கள் நந்தகுமார், நடராஜ், சூர்யகலா, மாவட்டச் செயலாளர்கள் திரு. கனகராஜ், திரு. செந்தில் முருகன், திரு. சுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மண்டல் தலைவர்கள் திரு. விமல் ராஜ், திரு. குணதாஸ் மற்றும் குன்னூர் நகர துணைத் தலைவர் திரு. ராம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
கூட்டத்தின் முடிவில், உதகை மேற்கு மண்டல பட்டியல் அணித் தலைவர் திரு. ரமேஷ் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பட்டியல் அணியின் மாவட்ட துணைத் தலைவர் திரு. கே. நந்தகுமார் அவர்களுக்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
