பழனி : ஜூலை 02,
தேசிய நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ், பழனி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக ஒன்பதாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று (01-07-2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
பாலசமுத்திரம் குரும்பப்பட்டியில் நடைபெற்ற தொடக்க விழாவிற்கு, பழனி கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் முத்துசாமி பாண்டியன் தலைமை தாங்கி, தடுப்பூசி பணியினைத் தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் சத்யா ஆகியோர் அடங்கிய கால்நடை மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டு தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனர்.
இம்முகாம் ஜூலை 1, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை (ஒரு மாதம் முழுவதும்) நடைபெறும். பழனி கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 89,100 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவது இலக்காகும்.
பழனி கோட்டத்தைச் சுற்றியுள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இந்தத் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது கால்நடைகளுக்குத் தவறாமல் கோமாரி நோய் தடுப்பூசி போட்டுப் பயனடையுமாறு பழனி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணை ஆசிரியர் : பழனி நா.ராஜாமணி – 8973350663
