மதுரையில் ரயில்வே காலனியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் பெண்கள் வரமஹாலஷ்மிபூஜை செய்தனர்.

ஆடி மாதம்23 திருவோண நட்சத்திரத்தில் இந்த சிறப்பான நாள் ஏகாதசி மற்றும் துவாதசி யும் சேர்ந்த பெருமாளுக்கு உகந்த நாளாகவும் உள்ளது. மங்களத்தையும் மாங்கல்ய த்தையும் அளிக்கக்கூடிய இந்த விரதத்தை சுமங்கலி பெண்களும் கன்னி பெண்களும இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
முப்புரி நூலில் ஒன்பது முடிச்சு போட்டு நோன்பு கயிறு கட்டி விரதத்தை துவங்கி முந்தைய நாளே வீட்டை தூய்மை செய்து மாக்கோலம் இட்டு கலசத்தில் அம்மனை அழைத்து வைத்து பூஜை செய்து மறுநாள் அம்மனுக்கு அலங்காரம் செய்து, இனிப்புகள், பழவகைகள்,வெற்றிலை பாக்கு, மங்கலபொருட்கள் படைத்து ,சுமங்கலி பெண்களை அழைத்து பாதபூஜை செய்து அம்மனுக்கு குங்குமம் உதிரி பூக்கள் வைத்து அர்ச்சனை செய்து மங்கல பாடல் பாடி ஆரத்தி எடுத்து அம்மனை வழிபாடு செய்து விருந்தளித்து மங்கலபொருட்கள் வழங்கி அனைவரும் அம்மன் அருள் பெற்று மகிழ்வுடன் வாழ்த்தி செல்வர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
