கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஏழாம் படைவீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது இந்த கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது இதைத் தொடர்ந்து கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை காண பக்தர்கள் கூட்டம் திரளாக திரண்டு உள்ளனர் கூட்ட நெரிசலை தவிர்க்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் இதனால் மருதமலை செல்லும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது இதனால் வாகனங்கள் வடவள்ளி தொண்டாமுத்தூர் கல்வீரம்பாளையம் வழியாக மருதமலைக்கு வரலாம் அதுவும் பாரதியார் பல்கலைக்கழகம் வரை மட்டுமே பேருந்துகள் வாகனங்கள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது வாகனங்கள் திரும்பிச் செல்ல இடையார்பாளையம் வடவள்ளி சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கோவை செய்தியாளர் ஏழுமலை.