திருப்பூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஹேண்ட் பால் (கைப்பந்து) போட்டியானது உடுமலை எஸ்கேபி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளிகளுக்கான மாணவர்கள் பிரிவில் அரசு மேல்நிலைப்பள்ளி காரத்தொழுவு மாணவர்கள் முதலிடம் பெற்றனர். மேலும் மாநில அளவிலான போட்டிக்கு மாணவர்கள் தேர்வாயினர். பயிற்சி கொடுத்த ஆசிரிய பெருமக்கள் விஜயன் மற்றும் கார்த்திகேயன் அவர்களுக்கும் வெற்றி பெற்ற பள்ளியின் மாணவர்களுக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு ஊர் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.