Headlines

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட, அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த, முன்னாள் ராஜ்ய சபா எம்.பி.!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட, அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த, முன்னாள் ராஜ்ய சபா எம்.பி.!

திருநெல்வேலி,டிச.18:-
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் உள்ள, 10 கடலோரக்கிராமங்களையும் உள்ளடக்கியுள்ள, ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட, நாடாளுமன்ற மேலவை (ராஜ்ய சபா)முன்னாள் உறுப்பினரும், நெல்லை புறநகர் மாவட்ட, அதிமுக பொருளாளருமான பி.சௌந்தரராஜன், சென்னையில் உள்ள, அதிமுக தலைமை கழகத்தில், இன்று (டிசம்பர்.18) காலையில், விருப்ப மனு தாக்கல் செய்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் “எடப்பாடி” கே.பழனிசாமி தலைமையில், தமிழ்நாட்டில் மக்களாட்சி மலர்ந்திட வேண்டும் என்பதற்காக, சென்னை ராயப்பேட்டை, அதிமுக தலைமை அலுவலகத்தில், பல்வேறு மாவட்டங்களை சார்ந்த அதிமுக நிர்வாகிகள், விருப்ப மனு கொடுத்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக பொருளாளரும், நாடாளுமன்ற மேலவை (ராஜ்ய சபா) முன்னாள் உறுப்பினருமான பி. சௌந்தர்ராஜன் இன்று (டிசம்பர்.18) காலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் O.S. மணியன், தளவாய் சுந்தரம், வைகை செல்வன் ஆகியோரிடம், விருப்ப மனுவை சமர்ப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சங்கரன் கோவில் வி.எம். ராஜ லட்சுமி, அதிமுக அமைப்பு செயலாளர் திசையன்விளை ஏ.கே.சீனிவாசன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். மைக்கேல் ராயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது, அதிமுகவின் ராதாபுரம் ஒன்றிய செயலாளர்கள் மேற்கு அந்தோணி அமலராஜா,கிழக்கு கே.பி.கே.செல்வராஜ், வள்ளியூர் தெற்கு பால்துரை, வள்ளியூர் வடக்கு லாசர், பேரூர் செயலாளர்கள் திசையன்விளை ஜெயக்குமார், பணகுடி லாரன்ஸ், மாவட்ட மீனவர் அணி செயலாளர் அகிலன், வர்த்தகர் அணி செயலாளர் பாரதி ராஜா, பணகுடி பேரூராட்சி கவுன்சிலர் டேவிட் ராஜன், மாவட்ட மகளிர் அணி துணை தலைவிகள் வசந்தி, கமலம் பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் நம்பிராஜன், வழக்கறிஞர் ராஜா, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் சுப்புராம், ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் அந்தோணி பிச்சை, முன்னாள் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரத்தினவேல்,
மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ராஜ்குமார்,ஏசுதுரை, சிவலிங்கம், குமரேசன், ஜெரால்டு, பரமேஸ்வரன், அஜித், செட்டிகுளம் கிளை செயலாளர்கள் சுயம்பு துரை, பால கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *