கழக தலைவர் – மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பின்படி, நீலகிரி மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் பொதுக்கூட்டம், உதகை ஏ.டி.சி., ஜீப் நிறுத்தம் முன்பு மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட அவை தலைவர் போஜன் அனைவரையும் வரவேற்றார்.
கழக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு ஆ.இராசா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக் , தேர்தல் பணி செயலாளர், அரசு கொறடா மாண்புமிகு கா.ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், தலைமை கழக செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், நகர-ஒன்றிய-பேரூர் கழக செயலாளர்கள் – நிர்வாகிகள், அணிகளின் அமைப்பளர்கள்-துணை அமைப்பளர்கள், கழக செயல்வீரர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் உதகை கிழக்கு நகர செயலாளர் ஜார்ஜ் நன்றி கூறினார்.
முன்னதாக, கூட்டத்தில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டு,
சிறப்பாக செயல்பட்ட BDAக்களுக்கு ஆ.இராசா எம்.பி., அவர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
