தென்காசி தெற்கு மாவட்டம் கொட்டா குளம் பகுதியில் மாவட்ட திமுக தொண்டரணி சார்பில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தென்காசி மேற்கு ஒன்றியம் கொட்டாகுளம் பகுதியில் நடைபெற்ற தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் கொட்டாகுளம் இ.இசக்கி பாண்டியன் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர்கள் குற்றாலம் சுரேஷ். கடையம் ராஜேஷ். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கொட்டாகுளம் ஆர்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகள், மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் கேக் பாக்ஸ் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொட்டாகுளம் பகுதியில் உள்ள 300 க்கும் அதிகமான வீடுகளுக்கும் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை நீங்களும் மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள் என்று கூறி அனைத்து வீடுகளுக்கும் கேக் பாக்ஸ் வழங்கினார்.
கேக் பாக்ஸை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் அனைவரும் திமுக தொண்டரணி அமைப்பாளர் இ.இசக்கி பாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியுடன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் ஒன்றிய அரசு நாள்தோறும் அறிவித்து வரும் மக்கள் விரோத திட்டங்கள், தேவையற்ற மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்பு தமிழகத்தின் வளர்ச்சிக்கு நிதி கொடுக்காமல் புறக்கணிப்பு செய்வது உள்ளிட்ட ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டிக்கும் வகையில் துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களிடம் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் துணை அமைப்பாளர் தி.கோமதிநாயகம், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் செல்வநாயகம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் சண்முகராஜ். செல்வவிநாயகம், திமுக கிளை கழக செயலாளர்கள் பரமசிவன். ராமர். மாரியப்பன். மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
