Headlines
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு – நாகர்கோவிலில் அம்பேத்கர், காமராஜர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு.

நாகர்கோவிலில் அம்பேத்கர், காமராஜர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய 3 மாவட்ட செயலாளர்கள் மற்றும் மகளிர் விடுதலை இயக்க மாநில துணைச் செயலாளர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று மாலை நாகர்கோவில் நகரில் அண்ணல் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர் மற்றும் பெரியார் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்கம் முழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளர் டாக்டர் ஷேக் முகமது, குளச்சல் தொகுதி மாவட்ட…

Read More
திருப்பரங்குன்றம் வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.

திருப்பரங்குன்றம் வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து தீபம் ஏற்றலாம் என்பது உறுதியாகி உள்ளது திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கை அரசு அரசியல் நோக்கில் அணுகியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட அரசே காரணம் எனவும்…

Read More
தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு சரியே! உறுதி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு

தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு சரியே! உறுதி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு.

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைப்பு! திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைப்பு! தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு திருப்பரங்குன்றம் தீர்ப்பில் தமிழக அரசு அரசியல் நோக்கில் செயல்பட்டது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட தமிழக அரசே காரணம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
200 வருட பழமையான வல்லம் சாகுல் ஹமீது ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் திறப்பு விழா

200 வருட பழமையான வல்லம் சாகுல் ஹமீது ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் திறப்பு விழா.

தென்காசி, ஜனவரி : 1 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் கிராமம் இயற்கை சூழ்ந்த பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்த சிறிய கிராமம் ஆகும் இங்கு பிரதான தொழிலாக அரிய வகை பழங்கள் மொத்த விற்பனை செய்யும் தொழிற்கூடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு வாழும் இஸ்லாமியர்கள் கடந்த 200 வருடங்களுக்கு முன்பாக தொழுகை பள்ளியை அமைத்து இறை வழிபாடு செய்து வந்தனர் பழமையான பள்ளி என்பதாலும் தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சியின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் தொழுகை…

Read More
வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.

வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.

விழுப்புரம் நகரின் பழைமை வாய்ந்த அருள்மிகு ஜனகவல்லித் தாயார் சமேத வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயிலில் பகல்பத்து உற்சவத்துடன் வைகுந்த ஏகாதசி திருவிழா டிசம்பர் 20 – ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து நாள்தோறும் முற்பகல் 11 மணிக்கு வைகுண்டவாசப் பெருமாளுக்கு அர்ச்சனை, தீபாராதனையும், தொடர்ந்து தீர்த்தபிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இராப்பத்து முதல் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இதையொட்டி வைகுண்டவாசப் பெருமாளுக்கு கருவறையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீ தேவி…

Read More
தென்காசி யு எஸ் பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் தின விழா கொண்டாட்டம்

தென்காசி யு எஸ் பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் தின விழா கொண்டாட்டம்.

தென்காசி : டிச-25 தென்காசி மாவட்டத்தில் மிகச் சிறப்பாக இயங்கி வரும் யு எஸ் பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் தின விழா பள்ளி வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர் செல்வராஜ், பள்ளி செயலர் சகாய செல்வமேரி ஆகியோர் தலைமை வகித்தனர். துணை முதல்வர் அபுதாஹிர் அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் நடனம், பைபிள் வாசித்தல், பாட்டு மற்றும் பேச்சு போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கிறிஸ்மஸ்…

Read More
தென்காசியில் செங்கோல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி

தென்காசியில் செங்கோல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி.

தென்காசி : டிச- 25 தென்காசி பங்கின் கிளை பங்கான செங்கோல் நகரில் அருள் பாலித்து கொண்டிருக்கும் செங்கோல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலி வருகை பவனியில் சிறு குழந்தைகள் குழந்தை யேசு சொரூபத்தை கரங்களில் ஏந்தி வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு திருப்பலியினை தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் உதவிப் பங்குத் தந்தை அருட் பணி. ஜியோ சந்தனம் அடிகளார் தலைமையேற்று நிறைவேற்றினார். “இன்று…

Read More
"தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத, முதலமைச்ருக்கு 'மதச்சார்பின்மை' பற்றி பேசுவதற்கு, துளியேனும் தகுதியில்லை!"- திருநெல்வேலி பேட்டியில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், கடுந்தாக்கு!

“தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத, முதலமைச்ருக்கு ‘மதச்சார்பின்மை’ பற்றி பேசுவதற்கு, துளியேனும் தகுதியில்லை!”- திருநெல்வேலி பேட்டியில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், கடுந்தாக்கு!

திருநெல்வேலி,டிச.21:- திருநெல்வேலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைக்கு, பதில் அளிக்கும் வகையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று (டிசம்பர். 21) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முதல்வர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, திட்டவட்டமாக மறுத்த அவர், தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “மேடைகளில் மதச்சார்பின்மை குறித்தும், மகாத்மா காந்தி குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால், அவர் உண்மையில் மதச்சார்பின்மையை கடை பிடிக்கிறாரா? என்பதை நான் ஒரு…

Read More
மதுரை ஜெயில் காளியம்மன் கோயிலில் மார்கழி அமாவாசை சிறப்பு பூஜை – பக்தர்களுக்கு அன்னதானம்..

மதுரை ஜெயில் காளியம்மன் கோயிலில் மார்கழி அமாவாசை சிறப்பு பூஜை – பக்தர்களுக்கு அன்னதானம்..

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஜெயில் காளியம்மன் கோயிலில் மார்கழி அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக வந்து அம்மன் தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். பூசாரிகளால் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில் முழுவதும் பஜனை, தீப ஒளி ஆகியவை ஆன்மிகச் சூழலை இன்னும் மேம்படுத்தின. பூஜைகள் முடிந்த பின்னர், பக்தர்களுக்காக அன்னதான ஏற்பாடுகள்…

Read More
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?மனுதாரர்களுக்கு இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?மனுதாரர்களுக்கு இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி

மலை உச்சியில் தூணில் தீபம் ஏற்றியதற்கு ஆதாரங்கள் உள்ளதா? அனைத்து தரப்பு வாதங்களையும் தனி நீதிபதி கேட்டாரா அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்தது ஏன்? தீபம் ஏற்ற குறுக்கு வழியை கையாண்டது ஏன்?” தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டில், மனுதாரர்களுக்கு இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More