இந்தியாவின் இரும்பு மனிதர் பாரதரத்னா சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் 150-ஆவது பிறந்ததினம் நாடுமுழுவதும் கொண்டாடப்படும் நிலையில் பழம்பெரும் பள்ளியான மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளியில் பாரதரத்னா சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் பிறந்தநாள் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் தலைமையாசிரியர் திரு.பாலாஜிராம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் திரு.இல.அமுதன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

உதவித்தலைமையாசிரியர் திரு.மகேஸ்வரன் அவர்கள் நன்றி கூறினார்.
மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.
