திருநெல்வேலி,ஜன.17:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், தலைவருமான, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 109- வது ஆண்டு பிறந்த தினவிழா, இன்று {ஜனவரி.17} தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான “எடப்பாடி” கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க, திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக, திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் நிறுவப்பட்டுள்ள, எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு, மாவட்ட செயலாளர் “தச்சை” என். கணேச ராஜா தலைமையில், “மலர் மாலை” அணிவித்து, “மரியாதை” செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அதிமுக அமைப்பு செயலாளர் “சுதா” கே.பரமசிவம், கொள்கை பரப்பு துணைச்செயலாளர் “பாப்புலர்” வி. முத்தையா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற அமைப்பாளர் “கல்லூர்” இ.வேலாயுதம், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி ஏ. சங்கரலிங்கம், சேரன்மகாதேவி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். புது நயினார் ஆதித்தன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு கிளை செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
