கேத்தி பாலாடாவில் செயல்பட்டு வரும் கெம்பையாடா தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச்சங்கத்தால் நடத்தப்படும் முதல்வர் மருந்தகம் மற்றும் சாந்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனிநபர் தொழில்முனைவோரால் நடத்தப்பட்டு வரும் முதல்வர் மருந்தகம் ஆகிய மருந்தகங்களை நீலகிரி மண்டல கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு .இரா.தயாளன் நேரில் ஆய்வு செய்து விற்பனையை அதிகரிக்க அறிவுறுத்தினார்.
நியாயவிலைக்கடைகள் மூலம் முதல்வர் மருந்தக மருந்துகள் மற்றும் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் விலை விவரங்களை ஒப்பீடு செய்து துண்டறிக்கைகள் அச்சிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் விற்பனை அதிகரிக்க முதல்வர் மருந்தக இடத்தை மாற்றுவதற்கான நடவடிக்கையைத் தொடர கெம்பையாடா தொடக்க வேளாண்மைக்கூட்டுறவுக்கடன் சங்கத்தின் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
