சென்னை, புழல் பகுதியில் அமைந்துள்ள டிரினிட்டி பூரண சுவிசேஷ சபையின் சார்பில் சிறுவர்களுக்கான கிருஸ்துமஸ் விழா புழல் ஜார்ஜ் நர்சரி பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டிரினிட்டி பூரண சுவிசேஷ சபையின் தலைமைப் போதகர் தேவ அன்பு, போதகர் ஜெரேமியா தேவநேசன் தலைமையில் நடைபெற்ற மாபெரும் சிறுவர்களுக்கான கிருஸ்துமஸ் விழாவில் 100ற்கும் மேற்பட்ட சிறுவர்கள்,சிறுமிகள் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஞாயிறு பள்ளி ஆசிரியர்களான இலக்கியா, ஜென்சி, சத்யப்ரியா, ப்ரீத்தி, மது, பியூலா, கிருபா, ஏஞ்சல், ஜாஸ்பர், காருண்யா, சந்தியா, கீர்த்தனா, சத்யா, ஹரிணி ஆகியோர் ஏற்பாட்டில் நடந்த நடனம், நாடகம், மைம், பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகளையும், குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் டேனியல், பிரகாஷ், அருண் ஆகியோரின் ஏற்பாட்டில் மேஜிக் ஷோ, குட்டி கதைகள், பொம்மலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளையும் சிறுவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்து மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் கிருஸ்துமஸ் விழாவில் வேலை செய்த தன்னார்வர்களான கோகுல் ஓபேத், ஏனோக், ஆனந்த், கோவதன், நிசி ஆகியோருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. கிருஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட 100ற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு சிறப்பு பரிசும், தேனீர் மற்றும் கேக்குகள் வழங்கப்பட்டது. பின்னர் சபையின் நிர்வாகிகள், தன்னார்வர்கள் குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.