ஆக் 18, திங்கள்நகர்
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் நேசமணி நினைவு சிறுவர் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த பணிக்கான ஒப்பந்தத் தொகை ரூ. 33 லட்சம். ஆனால், அந்தத் தொகையை பேரூராட்சி நிர்வாகம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒப்பந்ததாரர் தனது குடும்பத்தினர் உடன் கறுப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முனைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து போலீசும், பேரூராட்சி அதிகாரிகளும் நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் மக்கள் மற்றும் ஒப்பந்ததாரர் தரப்பினரிடையே தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்ட செய்தியாளர் – பாவலர் ரியாஸ்
