உடுமலை நவம்பர் 01.
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் ஆய்வு மற்றும் உதவிகள் வழங்கும் விழா உடுமலையில் நடந்தது. நகராட்சி ஆணையர் விநாயகர் வரவேற்றார்.
கவுன்சிலர் வேலுச்சாமி தலைமை வகித்தார். நகர மன்ற துணைத் தலைவர் கலைராஜன், மூத்த உறுப்பினர் ஆசாத் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட தாட்கோ மேலாளர் அஞ்சுன் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கினார். தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தூய்மை பணியாளர்களுக்கு நடத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சங்கரா ராமநல்லூர் பேரூராட்சி தாட்கோ தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்திற்கு ரூபாய் 7.50 லட்சம் மதிப்பில் கடன் உதவி வழங்கப்பட்டது. மேலும் 17 பேருக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் நலவாரிய துணைத் தலைவர் கனிமொழி, பத்மநாபன், வட்டாட்சியர் கௌரிசங்கர், மற்றும் உடுமலை சங்கராமநல்லூர், போடிப்பட்டி ,சின்ன வீரம்பட்டியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் உட்பட கலந்து கொண்டனர்.
