உடுமலை நவ.12-
திருமூர்த்தி அணையில் படகு சவாரி மீண்டும் செயல்படுத்துதல் தொடர்பாக மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக திருமூர்த்தி மலை உள்ளது. திருமூர்த்தி மலை சுற்றுலா பகுதியில் அமணலிங்கேஸ்வரர் கோவில், பஞ்சலிங்க அருவி மற்றும் திருமூர்த்தி அணை போன்ற பல்வேறு சுற்றுலாத்தலங்கள் உள்ளது. பல்வேறு சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
திருமூர்த்தி மலை அணை பகுதியில் செயல்பட்டு வந்த படகு இல்லம் பல ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது.
எனவே திருமூர்த்தி அணை பகுதியில் படகு இல்லம் மீண்டும் செயல்படுத்துதல் தொடர்பாக மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் திருமூர்த்தி அணை உதவி செயற்பொறியாளர் ஆதி சிவன், தளி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவா , திருப்பூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு குழு சுற்றுலா ஆர்வலர்கள் நாகராஜ், பூபதி, சத்யம் பாபு மற்றும் பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
