ஆக் 26, கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலைய போலீசார் நடத்திய வாகன சோதனையில் திருட்டு மற்றும் கஞ்சா வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.
கடந்த 22-08-2025 அன்று திருவிடைக்கோடு அருகே உள்ள 9வது சிவாலயம் மகாதேவர் கோவிலில் முகமூடி அணிந்த ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து திருட முயன்றார். அப்போது சப்தம் கேட்டதால் பகுதி மக்கள் கோவிலுக்குள் வர, அவர் தப்பிச் சென்றார். இதுகுறித்து கோவில் நிர்வாகம் புகார் அளிக்க, இரணியல் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை தொடங்கினர்.
இதனையடுத்து நேற்று காலை இரணியல் காவல் நிலையம் அருகே உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான நிலையில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்தபோது, அவர் முரண்பட்ட பதில் அளித்தார். அவரிடம் இருந்த மோட்டார் பைக்கை சோதனை செய்தபோது விற்பனைக்காக வைத்திருந்த 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அவர் குளச்சல் அருகே முத்துக்குமாரபுரம், வெள்ளியங்குளத்தைச் சேர்ந்த ஐயப்பன் மகன் சிவா (25) எனப்படும் கழுகு சிவா என்பது தெரியவந்தது.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
