Headlines

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி : புதிய திருப்பம்.

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி : புதிய திருப்பம்

மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் தமிழகம் முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.

அந்த நிறுவனம் பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்தவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதுடன் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் கார்கள், தங்கம், ஆவணங்கள், பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது

கைப்பற்றப்பட்ட சொத்துக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஆண்டு நியமித்த வல்லுநர் குழு மதிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நியோ மேக்ஸ் குழுமத்திற்கு சொந்தமான சொத்துக்களில் உடனடியாக விற்பனைக்கு தயாராக உள்ள அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.

இதில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 19, 000 வீட்டுமனைகள் நீதிமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் முன் அதிகாரப்பூர்வ ஏல அறிவிப்பு வெளியிடப்படும் .

இதில் பொதுமக்கள் மற்றும் விருப்பம் உள்ள முதலீட்டாளர்கள் கலந்து கொண்டு அவர்கள் கருத்துப்படி சந்தை மதிப்பில் ஏலத்தில் விடப்படும். இதன் மூலம் திரட்டப்படும் தொகை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு தீர்வாக வழங்கப்பட உள்ளது

மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *