Headlines

ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட விசிக கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள்…

ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட விசிக கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள்...

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கினால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட்டு வருகின்றன…

இந்நிலையில் குப்பை கிடங்கு வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் சரஸ்வதி வாஞ்சிநாதன் தலைமையில்

பேரூராட்சி அலுவலரிடம் 20க்கும் மேற்பட்ட முறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும் இதுவரை எவ்வித பயணம் ஏற்படவில்லை.

இதனை தொடர்ந்து 16வது வார்டு பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பொதுமக்களை திரட்டி ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து கவுன்சிலரிடம் பேரூராட்சி அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றன.

மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் முறையான நேரத்துக்கு வருவதில்லை.

தொடர்ந்து செயல் அலுவலர் இல்லாததால் முறையான நிர்வாகம் நடைபெறுவதில்லை.

பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் பொதுமக்களுக்கான வேலைகள் எதுவும் செய்வதில்லை.

கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூமிபூஜை நடைபெற்ற திட்டங்கள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன..

பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் நடைபெறும்
கூட்டங்கள் எதுவும் நடத்தப்படுவதில்லை.

தொடர்ந்து பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் எவ்வித சுகாதார வசதிகளும் பேரூராட்சி நிர்வாகத்தால் செய்து கொடுக்கப்படவில்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பேரூராட்சி நிர்வாகிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்
பொது மக்களுக்கான பொது வேலைகள் அனைத்தும் தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டன..

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *