அக்டோபர் 10 : உடுமலை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூங்கில் தொழவு ஊராட்சி சிக்கனுத்து கிராமத்தில் வசிக்கும் கோவிந்தராஜ் என்ற விவசாயி தனக்கு சொந்தமான விளை நிலத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு பெதப்பம்பட்டி உப கோட்டம் ராமச்சந்திராபுரம் மின்வாரிய பிரிவு அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தார் .இந்த நிலையில் கடந்தாண்டு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் ஒதுக்கீடு வழங்கியது .ஆனால் அருகில் உள்ள வெங்கடாசலம் முத்துசாமி செல்லமுத்து ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மின்வாரிய அதிகாரிகள் பலமுறை திரும்பிச் சென்றனர். இதற்கிடையில் இதுகுறித்து கோவிந்தராஜ் விவசாயி தரப்பில் வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு மற்றும் உடுமலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை மேற்கொண்டார்.

மின் இணைப்பு கிடைக்காத காரணத்தால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் கோவிந்தராஜ் குடும்பத்தினர் தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மின்வாரியம் தரப்பில் மின் இணைப்பு வழங்கும் பணிக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் மின்வாரிய அதிகாரிகள் பணிகளை மேற்கொள்ள முயற்சி செய்தபோது மீண்டும் எதிர் தரப்பினர் தடுத்ததால் பாதிக்கப்பட்ட விவசாயி மின் இணைப்பு உடனே வழங்கக்கோரி அங்கிருந்த ட்ரான்ஸ்பார்ம் முன்பு குடும்பத்துடன் ஓராண்டுக்கு மேலாக நீடிக்கும் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க விட்டால் தீ குளிக்க போவதாக பெட்ரோலைஉடலில் ஊற்றியதால் இப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது சம்பவ இடத்துக்கு வந்த குடிமங்கலம் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர் இதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின் இணைப்பு வழங்கும் பணிகளை மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்டனர்.
ஓர் ஆண்டுக்குப் பிறகு விவசாய நிலத்தில் மின் இணைப்பு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் கோவிந்தராஜ் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர் .
மின் இணைப்புக்காக விவசாயி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
