திருநெல்வேலி:
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட தாழையூத்து நாரணம்மாள்புரம் மற்றும் சங்கர் நகர் ஆகிய பேரூர்களின் திமுக சார்பில், “ஓரணியில் தமிழ்நாடு”திட்டத்தின் கீழ், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பாகமுகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட்ஸ் ஆகியோருக்கான பயிற்சி பட்டறை கூட்டம் ஆகியன, திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளரும், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.அப்துல் வகாப் தலைமையில், தாழை திமுக செயற்குழுஉறுப்பினர் மு. பேச்சி பாண்டியன், தொ.மு.ச. அமைப்புச் செயலாளர் ஆ.தர்மன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சக்தி சீதா ராஜவர்மன், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ராஜவர்மன் ஆகியோர் முன்னிலையில், இன்று [ஜூலை.6] காலையில் நடைபெற்றது.

நிகழ்வில் சங்கர் நகர் பேரூர் திமுக செயலாளர் என். செல்வ பாபு, நாரணம்மாள்புரம் பேரூர் திமுக எஸ். பேச்சி குட்டி, சங்கர் நகர் திமுக வழக்கறிஞர்கள் மு. கருணாநிதி, க.மகாராஜன், நாரணம்மாள்புரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், தொ.மு.ச.குமாரவேல், பேரூர் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் எம்.முத்துராமலிங்கம், கே. மனோஜ் பிரபு, நகர திமுக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பாக முகவர்கள். பூத் டிஜிட்டல் ஏஜெண்டுகள், மகளிர் அணியினர், திமுக தொண்டர்கள், சங்கர்நகர் நிர்வாகிகள் ராஜாமணி,சாரதி, மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
