Headlines

திருநெல்வேலி மாவட்டத்தில், தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மீட்கப்பட்ட, சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 செல்போன்கள், அதன் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், நேரில் வழங்கினார்!

திருநெல்வேலி மாவட்டத்தில், தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மீட்கப்பட்ட, சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 செல்போன்கள், அதன் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், நேரில் வழங்கினார்!

திருநெல்வேலி,அக்.24:-
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.P. முருகன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் V.ரமா தலைமையில், திருநெல்வேலி மாவட்டத்தில், கைப்பேசிகள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், 100 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, இன்று (அக்டோபர்.24)) காலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசனால், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதன் மொத்த மதிப்பு 17லட்சத்து,82ஆயிரத்து,773 ரூபாய் ஆகும். மேலும், காணாமல் போன அல்லது தவறவிட்ட செல்போன்கள் தொடர்பாக புகார் அளிக்க, CEIR- Central Equipment Identity Register https://www.ceir.gov.in/என்னும் இணைய தளம், இந்திய தொலை தொடர்பு துறையால் பிரத்தியேகமாக, உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில், புகார் தாரர்கள் தங்களுடைய தொலைந்து போன அல்லது தவறவிட்ட செல்போன்கள் தொடர்பான விவரங்களை பதிவு செய்து, புகார் அளிக்கலாம் அல்லது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மனுக்களின் ரசீதுகளை பதிவு செய்து, புகார் அளிக்கலாம்.

இவ்வாறு புகார் கொடுத்த பின்பு, மனுதாரரின் செல்போன், வேறு ஒருவரால் பயன்படுத்த முடியாதவாறு, Block செய்யப்படும். மேலும், மனுதாரர் செல்போனில், புதிதாக சிம்கார்டு பயன்படுத்திய விபரங்கள் தொடர்பான அறிவிப்பும், மனுதாரருக்கு உடனடியாக தெரிவிக்கப்படும்.

காணாமல் போன செல்போனை பயன்படுத்தி, பல குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால், தொலைந்த அல்லது காணாமல் போன செல்போன் குறித்து, உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தால், தொலைந்து போன அல்லது தவறவிட்ட செல்போனை, உடனடியாக மீட்க முடியும்! என, பொதுமக்களிடம் “விழிப்புணர்வு” ஏற்படுத்தப்பட்டது.

மேலும், சைபர் குற்றங்கள் தொடர்பாக, பொதுமக்கள் பாதிக்கப்பட்டால், உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை, தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் அல்லது https://cybercrime.gov.in/ என்ற இணைய தளத்திலும், புகார் அளிக்கலாம்.

இந்த ஆண்டு (2025) மட்டும், இதுவரையிலும் மொத்தம் 404 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரால், நேரடியாக உரியவர்களிடம், ஒப்படைக்கப்பட்டு உள்ளன! என்பது, குறிப்பிடத்தக்கதாகும்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *