Headlines

சென்னை ராயப்பேட்டையில் பெண்ணை பாலியல் துன்புறுத்திய நபர்மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை.!

சென்னை ராயப்பேட்டையில் பெண்ணை பாலியல் துன்புறுத்திய நபர்மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை பாலஜிநகர் பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் (வயது 37) இவர் அதே பகுதியை சேர்ந்த முகமதியா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது.) பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 08.09.2024 அன்று தகாத உறவு வைத்துள்ள அப்பெண்மணியின் மகள் ஆயிஷ்மா என்ற பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி அப்பெண்ணின் சகோதரி ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரான அசாருதீன் என்பவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியான நிலையில் சம்பந்தப்பட்ட நபர்‌மீது ராயப்பேட்டை மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


கடந்த மாதம் 28 ம் தேதி வழக்கு பதிவு செய்த நிலையில் இதுவரை அசாருதீன் என்பவரை கைது செய்யாமல் காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதாக பெண்ணின் குடும்பத்தார் குற்றம் சாட்டுகின்றனர். இதுசம்பந்தமாக அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தாரணி என்பவரிடம் புகார்தாரர் தரப்பில் கேட்டபோது ஏர்சோஸ் நிகழ்ச்சி நடக்க இருப்பதால் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போதைக்கு எதையும் செய்ய முடியாது. ஏர்சோஸ் நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டி உள்ளதால் அந்த நிகழ்ச்சி முடிந்த பின்பு சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாக காவல் ஆய்வாளர் கூறியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டார் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அசாருதீன் என்பவரை ஒரு மாதம் ஆகியும் கைது செய்யாமல் இருப்பதற்கான காரணம் தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதில் காவல்துறைக்கு என்ன தயக்கம் ஏற்பட்டுள்ளது என தெரியவில்லை. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணின் நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது. ஆகவே இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்தாரர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *