தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விடைத்தாள் திருத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.