கடலூர் :
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிகம்பட்டை சேர்ந்தவர் முந்திரி வியாபாரி குருசாமி.
இவரது 16 வயது மகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்த விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் 16 வயது சிறுவர்கள் 2 பேருடன் சேர்ந்து குருசாமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள்.
இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து கல்லூரி மாணவரை கைது செய்தனர்.மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்
