திருநெல்வேலி,நவ.3:-
நெல்லையை அடுத்துள்ள, பேட்டை “நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி” யில், மாவட்ட ஜுனியர் “அட்யா- பட்யா'(ATYA PATYA) “சேம்பியன்சிப்” போட்டியில், “தங்கப்பதக்கம்” பெற்ற மாணவர்களுக்கு, பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி, இன்று (நவம்பர்.3) காலையில், பள்ளித் தலைமையாசிரியை “முனைவர்” ரோகிணி தலைமையில், நடைபெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அவர் பதக்கம், சான்றிதழ் மற்றும் கோப்பை ஆகியவற்றை வழங்கி, பாராட்டியதுடன், அனைவருக்கும் நல்வாழ்த்துகளையும், தெரிவித்தார்.
இந்த, வெற்றியின் மூலம், மாணவர்கள் உயர் கல்வி பயிலும் தகுதி பெற்றுள்ளனர்! அதுமட்டுமல்லாமல், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில், பங்கேற்று விளையாடுவதற்கும், தகுதி பெற்றுள்ளனர்.
இந்த நிகழ்வில், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் “முனைவர்” வெ.பெரியதுரை, முதுகலை வணிகவியல் ஆசிரியர் குமார் உள்பட, ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ -மாணவிகள் கலந்துகொண்டு, சிறப்பித்தனர்.
மேலும், “பெற்றோர் ஆசிரியர் கழகம்”(PTA) நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு (SMC) நிர்வாகிகள் ஆகியோரும் பங்கேற்று,பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பாராட்டி,நன்றி கூறினர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.
