திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லா பேட்டை பகுதியில் இன்று சுஹர் தொழுகை முடிந்து வெளியே வந்த இசுலாமியர்கள் மத்திய அரசு நிறைவேற்ற உள்ள புதிய வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் கண்டன பதாகைகள் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வக்ஃபு வாரிய புதிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப் பட்டால் ஷாயின்பாக் ஆர்ப்பாட்டம் போல தொடர் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று அறிவித்ததுள்ளனர்.