திருப்புவனத்தில் திருடிய பைக்கை உரிமையாளர் வீட்டின் முன்பு மன்னிப்புக் கடிதம் மற்றும் ரூ.1500 உடன் நிறுத்திய திருடன்
“ஆபத்துக்கு பாவம் இல்லனு எடுத்துட்டேன். தவறை உணர்ந்து 450 கி.மீ. தாண்டி வந்து உங்கள் வீட்டிலயே நிறுத்திட்டேன். வண்டி கொடுத்ததற்கு நன்றி; பெட்ரோல் டேங்கில் ரூ.1500 வைத்துள்ளேன்.
எப்படியும் என்னை கெட்ட வார்த்தையில் பேசியிருப்பீங்க, அத நெனச்சு வருந்துங்கள் இல்லை என்றால் வருந்த வைப்போம் இப்படிக்கு பிளாக் பாண்டா பயலுக..” என கடிதம் எழுதி வைத்த திருடர்
செய்தியாளர் சின்னத்தம்பி.