திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள். வெறும் கையால் குப்பை அழுவதால் கிருமி தொற்று தோல் நோய்கள் சுவாசக் கோளாறுகள் டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் வயிற்று பிரச்சினைகள் மற்றும் குப்பைகள் உள்ள நச்சுப் பொருட்கள் தோளில் பட்டு எரிச்சல் போன்றவைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும். குளிர்காலத்தில் அதிகாலையில் பணியாற்றும் பொழுது குளிர்ந்த காற்று மற்றும் பனியிலிருந்து காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் எதுவும் வராமல் இருப்பதற்கு 50 க்கு மேற்பட்டோர்களுக்கு கை குளோஸ். தலைக்கு குல்லாவும் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் அமெரிக்காவில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் அர்ஷாத் அரிஃப் மற்றும் தலைவர் முகமது உசேன். செயலாளர் முகமது இப்ராஹிம். பொருளாளர் குழந்தைவேல். துணைச் செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்
