குளச்சலில் டாஸ்மார்க் கடை மாற்ற கோரி இளைஞர் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரில் பயணியர் விடுதி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மார்க் மதுக்கடை மற்றும் பார் காரணமாக பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது.
இதனை அகற்ற கோரி, இளைஞர் காங்கிரஸார் குளச்சல் பேருந்து நிலையம் அருகில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.
இந்த இயக்கத்தின் மூலம் மதுவின் தீமையை மக்களுக்கு எடுத்துரைப்போம் என்றும், சேகரிக்கப்பட்ட கையெழுத்து மனுவை தமிழக முதல்வரிடம் நேரடியாக அளிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குமரி மாவட்ட கேமராமேன் ஜெனீர்
