உதகை சட்டமன்றம் உதகை நகர் கஸ்தூரிபாய் காலனியில் பிரச்சார பிரிவின் ஏற்பாட்டில் அமைப்புசாரா பிரிவு மற்றும் உதகை நகர் மண்டல் ஒத்துழைப்பில் மோடி பொங்கல் கொண்டாடப்பட்டது.

தாய்மை பொங்கல் என சிறப்பு பெயரோடு தாய் மண்ணிற்கும் தாய்மாரை காக்கும் பாரத பிரதமருக்கும் நன்றிசெலுத்தும் வகையில் கொண்டாடபட்டது.
பட்டியலின மக்கள் வாழும் இந்த காலனி பகுதி மிகவும் பின்தங்கியுள்ள மக்கள் வாழும் பகுதியாகும். இந்த காலனியை சார்ந்த சுமார் 150 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பாக உயர்தர பச்சரிசி, வெல்ல பொடி, பருப்பு, நெய்,திராட்சை, முந்திரி, ஏலக்காய் உட்பட்ட மளிகை பொருட்களும், புதிய மண்பானையும், தரமான புடவையும், கரும்பும் பரிசாக கொடுக்கப்பட்டது. முன்னதாக கோவில் வளாகத்தில் 11 பானைகளில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைத்து மோடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பத்திரிக்கை சந்திப்போடு நிறைவடைந்த இந்த விழாவில் மாநில பிரச்சார பிரிவின் அமைப்பாளர் திரு.DS பாண்டியராஜ் கலந்துகொண்டார்.
மாவட்ட தலைவர் தருமன், மண்டல தலைவர் கார்த்திக், கிளை தலைவர் மணி, முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உட்பட மண்டல, மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
