விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் புற காவல் நிலையத்தில் பணி புரியும் தலைமை காவலர் திரு.ராஜசேகர் என்பவர் இரவு (20.11.2025) அன்று பணியில் இருந்த போது திருவண்ணாமலை பேருந்துகள் நிற்கும் தடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சிறுவனை புறகாவல் நிலையம் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டதில் கஞ்சா பொட்டலங்கள் என தெரியவந்தது.
மேலும் சிறுவனிடம் இருந்து சுமார் 350 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றி சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உதவிய தலைமை காவலர் திரு.ராஜசேகர் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு 6 ல் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ரவிக்குமார் பணியில் இருந்த போது அசோகபுரி பேருந்து நிறுத்தம் அருகே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 3 1/2 யூனிட் ஆற்று மணல் இருந்ததை கண்டறிந்து இதன் எதிரிகளை கைது செய்து கெடார் காவல் நிலையத்தில் ஒப்படைத்து சிறப்பு பணி செய்தமைக்காக சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ரவிக்குமார் அவர்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன்.IPS அவர்கள் நேரில் அழைத்து மேற்கண்ட காவலர்களின் பணியினை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
