Headlines

உதகையில் பார்சன்ஸ் வேலி குடிநீரை நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.

உதகையில் பார்சன்ஸ் வேலி குடிநீரை நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.

உதகை நான்காவது வார்டு மற்றும் ஆறாவது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஆட்லிசாலை பகுதி கிளன்ராக் பகுதி வண்டி சோலை பகுதிக்கு ஆட்லிசாலை வழியாக பார்சன்ஸ் வேலி குடிநீர் நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.

6..இன்ச் குழாய் மூலம் செல்லும் இந்த குடிநீர் குழாய் மூலம் தனிப்பட்ட ஒருவரின் ஓட்டலுக்கு சட்டத்திற்கு புறம்பாக 2 இன்ச் குழாய் தார் சாலை வெட்டி குடிநீர் இணைப்பு கொடுக்க நகராட்சி அதிகாரிகள் முயற்சி செய்து வந்தனர் கடந்த மாதம் இரண்டு முறை இரவு நேரத்தில் சாலை தோண்டி குழாய் புதைக்கும் முயற்சி நடந்தது அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் மற்றும் மு.நகரமன்ற உறுப்பினர்.மற்றும் பொதுமக்கள் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி இந்த பிரச்சினை கை விடப்பட்டது.

மீண்டும் நகராட்சி அதிகாரிகள் ஆதரவுடன் 7 ந்தேதி பகல் ஒருமணி அளவில் மீண்டும் குழாய் புதைக்கும் முயற்சி நடந்தது அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர் காவல் துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அந்த இடத்திற்கு வந்து இனி இதுபோன்ற நடக்காது என்று நகராட்சி அதிகாரிகள் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி அங்கு போட முயற்சி செய்த குழாய்கள் அகற்றப்பட்டது.

இந்த பொது மக்கள் பிரச்சினை தீர ஆதரவு தந்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் நான்காவது வார்டுதபொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் . சரியான நேரத்தில் வந்துதடுத்துநிருத்தினர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *