அக் 08; கன்னியாகுமரி-
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்தின் வனப்பணியாளர்கள் மற்றும் லீபுரம் கிராம பஞ்சாயத்து MGNREGS பணியாளர்கள் இணைந்து இன்று காலை ஐயங்குளம் குளக்கரையில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பனையின் நேரடி மற்றும் மறைமுக நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பனை மரம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், நீர் வளம் பேணுவதற்கும், இயற்கை பேரழிவுகளைத் தடுப்பதற்கும் பெரும் பங்கு வகிப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வனப்பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, பனை வளர்ப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
தமிழக விடியல் குமரி மாவட்ட நிருபர் – பாவலர் ரியாஸ்.
