அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனம் (BBFI) பெருமையுடன், 8வது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநிலங்களுக்கு இடையேயான ஃபெடரேஷன் கோப்பை 2024-25, குஷால்நகர், குடகு மாவட்டம்,கர்நாடக மாநிலத்தில் 06.12.2024 – 08.12.2024 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பெண்கள் பிரிவில் தமிழக பெண்கள் அணி முதலிடத்தையும் ஆண்கள் பிரிவில் ஆண்கள் அணி இரண்டாம் இடத்தை கைப்பற்றியது.
பெண்கள் பிரிவில் மற்ற அணிகளை வீழ்த்தி தமிழ்நாடு அணி கேரளா,மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகா அணிகள் சூப்பர் லீகிற்கு தகுதி பெற்ற நிலையில் பெண்கள் அணி தமிழ்நாடு கர்நாடகாவை (34-36,35-29,35-30), கேரளா அணியை (35-23,35- 25) மற்றும் மகாராஷ்டிரா அணியை(35-27,35-27) புள்ளியில் வீழ்த்தி தமிழ்நாடு பெண்கள் அணி முதலிடத்தை கைப்பற்றியது.
ஆண்கள் பிரிவில் மற்ற அணிகளை வீழ்த்தி தமிழ்நாடு, ஆந்திர பிரதேஷ்,கர்நாடகா மற்றும் இந்திய ரயில்வே சூப்பர் லீகிற்கு தகுதி பெற்றது. இதில் தமிழ்நாடு ஆண்கள் அணி ஆந்திர பிரதேச அணியை(35-23,35-27) மற்றும் கர்நாடகா அணியை(35-32,35-31) புள்ளியில் வீழ்த்தி தமிழ்நாடு ஆண்கள் அணி இரண்டாம் இடத்தை கைப்பற்றியது வெற்றி பெற்ற அணிகள் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தபோது பி எஸ் என் ஏ பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்தும் மலர் மாலை அணிவித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சி வரவேற்பில் மாநில பூப்பந்தாட்ட கழக செயலாளர் விஜய் பூப்பந்தாட்ட மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாசன் மாவட்ட கால்பந்து நடுவர் சங்கத் தலைவர் அருண் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சத்தியமூர்த்தி மாவட்ட பூப்பந்தாட்ட கழக துணை செயலாளர் மகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளை பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி சார்பாக வரவேற்றனர்.
திண்டுக்கல் மாவட்ட நிருபர் : பாலசிந்தன்.