திருநெல்வேலி,நவ.6:-நெல்லை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ், மேலப்பாள்யத்தில் இயங்கி வரும், காயிதே மில்லத் மேல்நிலைப்பள்ளியில், 11-ஆம் [+1] வகுப்பு படித்து வரும் மாணவ- மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று [ நவ.6] காலையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், “சிறப்பு” அழைப்பாளராக பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், “மாணவச்செல்வங்கள் நன்றாக படித்து முன்னேறி, நாட்டுக்கும்- வீட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்!” என்று, கேட்டுக் கொண்டார்.
விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள், மாணவ- மாணவிகள் ஆகியோருடன், மேலப்பாளையம் பகுதி திமுக செயலாளர் “துபை” சாகுல் அமீது, மேலப்பாளையம் மண்டல சேர்மன் கதீஜா இக்லாம் பாசிலா, திமுக வழக்கறிஞர் ஏ.எல்.பி. தினேஷ், “டாஸ்மாக்” தொ.மு.ச. செயலாளர் “அரசன்” N.ராஜ், தச்சநல்லூர் பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேஷ் ஆதித்தன், மானூர் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் “கானார்பட்டி” சாமுவேல் உள்ளிட்ட பலரும், கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்களான, மேலப்பாளையம் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை “குழந்தை இயேசு” பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிலும், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.