கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் கருவேப்பிலை பாளையத்தைச் சேர்ந்த துளசி என்பவர் ஆட்டு வியாபாரம் செய்து உள்ள வியாபாரத்தில் பணப்பிரச்சினை ஏற்பட்டது இதை காரணம் கொண்டு துளசி என்பவரை விழுப்புரம் ஜானகிபுரம் பனந்தோப்பில் கூலிப்படையினால் அடித்துக் கொல்லப்பட்டார்.
இதற்கு நியாயம் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இன்று துளசி அவரது மனைவி அவரது ஆறு மாத குழந்தை ஊர் பொதுமக்கள் உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் திரு.குமரகுரு அவர்களிடம் குறைகளை கூறினார் அவர் உடனடியாக துளசி மனைவி குழந்தைக்கு குடும்ப செலவுக்கு என்று ரூபாய் 50,000 வழங்கியுள்ளார், துளசி மனைவிக்கு ஆறுதல் கூறினார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் – அந்தோணிசாமி
