உடுமலை
நவம்பர் 06.
உடுமலை அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு நடந்தது. தாலுகா செயலாளர் கல்லாபுரம் அருணாச்சலம் தலைமை வகித்தார்.
செல்வராஜ், சுந்தரராஜ். ராஜசேகர், ஜெயக்குமார், கருப்புசாமி, சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மடத்துக்குளம் தாலுகா கல்லாபுரம் முதல் கடத்தூர் வரையில் உள்ள விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். விவசாயிகளின் நிலங்களை மிரட்டி பறிக்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முறைகேட்டில் ஈடுபட்ட சார் பதிவாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும். சட்டவிரோத பத்திரப்பதிவு ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிர்வாகிகள் ராஜேந்திரன், செந்தில்குமார், முத்துகிருஷ்ணன். முருகேசன். மீனாட்சி சுந்தரம். பாலசுப்பிரமணியன். உட்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
